கோயில் பற்றி சில குறிப்புகள்

இக்கோயில் ஆதி அனாதி காலந்தொட்டு பறையன் பாப்பான்குளம் என்று அழைக்கப்படும் கிராமத்தின் தென்புறம் சுமார் 2 கி.மீ தாண்டி, எட்டுபிள்ளைக் கூட்டத்தார் பெண்வழிக்காணி சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. களக்காட்டிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழ்ப்பக்கம் ஒரு கொப்புராத் தோப்பு பாதையின் நடுவில் அமைந்துள்ளது.
இந்தப் பாதையின் கிழக்கு தொடர்பு தெற்கு காருகுறிச்சிக்குப் பின் தடைபட்டு விட்டது. ஆனால் கோயிலிலிருந்து இப்போது சிங்கம்பட்டி, ஏரம்மாள்புரம் வழியாக பாபநாசத்தை அடைந்து அதன் தொடர்ச்சி கீழாம்புர் கிராமத்தை சென்றடைகிறது.
கோயிலில் உண்டியலோ, துவஜஸ்தம்பமோ, உத்ஸவ விக்கிரகங்களோ, பெரிய பிரகாரங்களோ அமையப் பெறவில்லை.
தினமும் இரவு பூஜை கிடையாது. பிரதி வருடம் தை மாதத்தில் 4 அல்லது 5 வெள்ளிக் கிழமைகளில் பகல் பூஜையும், இரவில் அபிசேக பூஜையும் நடு இரவில் பரிகார தேவதைகளுக்கு ரகசிய பூஜையும் நடைபெறும். தை மாதப் பிறப்பு வெள்ளிக் கிழமை வந்தால் அன்றும், மறுதினமும் பொது பூஜை கிடையாது. அடுத்து வரும் வெள்ளிக் கிழமை பொது பூஜை வைக்கப்படும். அப்பொழுது காப்பரிசியும், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காயுடன், பானகமும் நிவேதனம் செய்யப்படுகிறது. காணிக்கையாக கோமுரத்தாரிடம் பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் காணிக்கை காசுகளையும், முழுத் தேங்காயையும் கொடுப்பது வழக்கம்.
ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் இத்திருக்கோவிலை பராமரித்து வருகிறது.

பெண்கள் எந்த வயதினரும் அனுமதி கிடையாது என்பதும் 18 வயது பூர்த்தியாகாத ஆண்கள் எவரும் அனுமதி கிடையாது என்பதும் வழிவழியாக நம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அறிந்ததே. அது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது

தை வெள்ளி மற்றும் நவராத்திரி காலங்களில் அன்னதானம் செலவுகளை ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் ஏற்றுக் கொள்கிறது.

இது தோஷ பரிகார கோவில் கிடையாது. எனவே இங்கு எந்த விதமான பரிகார பூஜைகளும் நடத்த படுவதில்லை. கோவில் பக்தர்கள் விரும்பினால் சண்டி ஹோமம் மற்றும் ருத்ர ஹோமம், சாஸ்தா சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை மட்டும் விசேஷ நாட்களில் sponsor செய்து ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

மற்ற சாதாரண நாட்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையில் பகல் பூஜை மட்டும் நடைபெறும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் கோவில் தகவல் தொடர்பு அதிகாரியை (Cell : 6381635486) தொடர்பு கொண்டு பின் வரவும். மேலும் பூஜை, கோவில் பற்றிய விபரங்களுக்கும் கோவில் தகவல் தொடர்பு அதிகாரியை அணுகவும்.

நமது திருக்கோவில் A/C ற்கு (1106101067814) ஆன்லைன்-ல் பணம் அனுப்பியவர்கள் கண்டிப்பாக பண பரிமாற்ற விபரம் மற்றும் உங்களுடைய விபரம் அனைத்தையும் swamysadaiudayartemple@gmail.com என்ற ஈமெயிலுக்கு அல்லது 6381635486 என்ற Whatsapp எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் ரசீது மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

டிரஸ்ட் A/c-ற்கு (1106101062746) பணம் அனுப்பியவர்கள் கோவில் தகவல் தொடர்பு அதிகாரி மூர்த்தி அவர்களை (Cell : 6381635486) தொடர்பு கொண்டால் உங்களுக்கு ரசீது மற்றும் பிரசாதம் அனுப்பி வைப்பார்.

கோவிலுக்குரிய நேர்ச்சை காணிக்கைகள் மற்றும் பொருள்களையும், கோமுறத்தாருக்கு கொடுக்க வேண்டிய காணிக்கைகளையும் , கோவில் தகவல் தொடர்பு அதிகாரியிடமோ அல்லது நமது கோவில் ட்ரஸ்ட்டியிடமோ மட்டுமே கொடுத்து ரசீது பெற்று கொள்ள வேண்டியது அவசியம். வேறு நபர்களிடம் கொடுக்கும் எந்த பொருளுக்கும் கோவில் நிர்வாகம் அல்லது டிரஸ்ட் பொறுப்பாகாது. மேலும் கோவில் சம்பந்தமான எந்தஒரு அபிவிருத்தி, விசேஷ நாட்களுக்குரிய கட்டளை மற்றும் டொனேஷன் சம்பந்தமாக கோவில் தகவல் தொடர்பு அதிகாரியிடமோ அல்லது நமது கோவில் ட்ரஸ்ட்டியிடமோ மட்டுமே அணுகவும். இந்த தளம் ஒன்று மட்டுமே கோவிலிலிருந்து இயக்கப்படுகிறது. வேறு எந்த தளத்திலிருந்து வரும் செய்திகளுக்கும் கோவில் நிர்வாகம் பொறுப்பாகாது.
நன்றி

Please Contact :
MR.S.MANTHIRA MOORTHI,
Temple Communication Dept.
Cell : 6381 6354 86 (Call/W.App/Msg)

or email to swamysadaiudayartemple@gmail.com
-------------------------------------------------------------
K.VENKATA RAMAN
Temple Trustee
SWAMY SADAIUDAYAR TEMPLE
No.26/160, SADAIUDAYAR SEVA TRUST,
Veerappa puram Street, Kallidaikurichi - 627416.
Tirunelveli
Cell : 9842151386 (Call / W.A / Msg)
(Time : 9.00 a.m. to 1.00 a.m. - 4 p.m. to 8.30 p.m.)

Thursday, March 12, 2026

ESTIMATE DETAILS OF THIRUPPANI, YAGASALAI, ANNADHANAM

 கும்பாபிஷேக விஷயமாக டிரஸ்ட் வங்கி கணக்கிற்கு  பணம் அனுப்புபவர்கள் ''கும்பாபிஷேக காணிக்கை'' என்று குறிப்பிட்டு அனுப்பவும்...

கும்பாபிஷேக விஷயமாக பணம் அனுப்புபவர்களுக்கு கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் பத்து நாட்களுக்குள் அனைவருக்கும் பிரசாதம் அனுப்பப்படும்.

Those who send money to the Trust Bank account for the Kumbabhishekam ceremony should mention ''Kumbabhishekam Kaanikkai'' and send it...

Prasad will be sent to all those who send money for the Kumbabhishekam ceremony within ten days after the completion of the Kumbabhishekam ceremony.






THIRUPPANI WORK DETAILS SEPERATELY GIVEN BELOW




YAGASALAI WORK DETAILS SEPERATELY GIVEN BELOW





THANK YOU


INFORMATION ABOUT OUR BANK DETAILS

அனைவருக்கும் வணக்கம் 

நமது ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் 2026 கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 

திருப்பணி வேலைகள் மற்றும் கும்பாபிஷேக வேலைகள் மற்றும் அன்னதானம் ஆகியவற்றில் பங்கு பெற விரும்புவோர் நமது ஸ்வாமி சடைவுடையார் சேவா டிரஸ்ட் பின்வரும் வங்கி கணக்கிற்கு தங்களது காணிக்கைகளை செலுத்தி அதன் விபரங்களை 6382548731 என்ற எண்ணிற்கு மட்டும் வாட்ஸ் அப்பில் தெரிவித்தால் போதுமானது.

இந்த எண்ணானது தகவல் தெரிவிப்பதற்காக மட்டுமே (Only W/app Message ) பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

 இதில் யாரும் போனில் அழைக்க வேண்டாம்.(Don't Phone call to this number / Only message).

திருப்பணி மற்றும் நன்கொடை தொடர்பான மேலும் விவரங்களுக்கு நடைமுறை நிர்வாகி 

திரு வெங்கட்ராமன்  : Cell : +91 98421 51386

திரு நடராஜன் : CELL : +91 93444 63519

அவர்களை கலந்து ஆலோசித்துக் கொள்ளவும்.

நன்றி

Swamy Sadaiudayar Seva Trust

Cell no : 6382 54 8731

(Only message / no calls)

**************************************************

** _*A/C DETAILS_ ***

Please send your contribution to

Swamy Sadaiudayar Seva Trust 

A/c no : 1106101062746

Canara bank, Kallidaikurichi

IFSC : CNRB0001106


OR USING THE FOLLOWING QR CODE (both are Same A/c)

**************************************************


After the Transaction 

Please furnish the following details and send it to.   W/APP : 6382548731 

1. Transaction slip

2. Receipt name and address

3. Pan card number 

Thank you

மேற்கண்ட வங்கி கணக்கை உபயோகித்து உங்கள் வங்கியிலிருந்து NEFT, IMPS மூலமாகவும் செலுத்தலாம். QR Code உபயோகித்து GPAY மற்றும் PHONE PAY, BHIM வழியாகவும் செலுத்தலாம்.

ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் வங்கி கணக்கிற்கு அனுப்பும் நன்கொடைகளுக்கு 80 G ரசீது வழங்கப்படும்

பணம் அனுப்பிய பின் கட்டாயம் 6382548731 வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவிக்கவும்


Hello everyone 

On the occasion of our Swami Sadaivudaiyar Temple 2026 Kumbabhishekam 

Those who wish to participate in the Thirupani works and Kumbabhishekam works and Annadhanam, it is sufficient to pay their donations to the following bank account of our Swami Sadaivudaiyar Seva Trust and inform its details only to the number 6382548731 on WhatsApp.

This number has been specially created for contribution information purposes only (Only W/app Message).

No one should call on this number by phone.

For more details regarding the renovation and donation, please contact the Executive Administrator Mr. Venkatraman  : Cell : +91 98421 51386
NATARAJAN : 93444 63519

Please discuss with them.

Thank you


Swamy Sadaiudayar Seva Trust

Cell no : 6382548731

(Only message / no calls)

**************************************************

** _*A/C DETAILS_ ***

Please send your contribution to

Swamy Sadaiudayar Seva Trust 

A/c no : 1106101062746

Canara bank, Kallidaikurichi

IFSC : CNRB0001106

**************************************************

After the Transaction 

Please furnish the following details and send it to. W/APP : 6382548731 

1. Transaction slip

2. Receipt name and address

3. Pan card number 

Thank you

You can also pay through NEFT, IMPS from your bank using the above bank account. You can also pay through GPAY and PHONE PAY, BHIM using QR Code.

 Donations sent to Swami Sadaiudaiyar Seva Trust Bank Account will be issued with an 80G receipt

After sending the money, please inform us on WhatsApp at 6382548731

THANK YOU

ஸ்ரீ பொற்சடைச்சி ஸ்வாமி ஸ்ரீ சடையுடையார் திருக்கோவில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம்

ஸ்ரீ பொற்சடைச்சி 

ஸ்வாமி ஸ்ரீ சடையுடையார் திருக்கோவில் 

அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் 


அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நிகழும் மங்களகரமான 1201ம் ளூ விஸஂவாவஸூ வருஷம் பங்குனி மாதம் 20ஆம் தேதி 03.04.2026 வெள்ளிக்கிழமை த்விதியை திதியும் சித்திரை நக்ஷத்திரமும் ஸித்த யோகமும் கூடிய சுப தினத்தில் அன்று காலை 9 to 10.30 க்குள் ரிஷப லக்னத்தில் அம்பாசமுத்திரம் வட்டம் தெற்கு பாப்பான்குளம் வீற்றிருக்கும் அருள்மிகு  ஸ்வாமி சடையுடையார் மற்றும் அருள்மிகு மகா கணபதி, அருள்மிகு பொற்சடைச்சி மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உத்தமம்.

நாளது தேதியில் மேற்படி கும்பாபிஷேகத்தை நமது திருக்கோவில் கோமுரத்தார் திரு. ஹரிஹரன் அவர்களும், கருவேலம் திரு. V.கணேசன் அவர்களும், எட்டுப்பிள்ளை கூட்டத்தார்களும் நமது திருக்கோவில் நிர்வாகமும் மற்றும் அர்ச்சகர்கள் திரு.குமார் மற்றும் அர்ச்சகர் திரு.ராமச்சந்திரன் அவர்களும் மற்றும் ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்டும்  இணைந்து நல்ல முறையில் நடத்திக் கொடுப்பார்கள்.

அன்றைய தினம் அன்னதானம் உண்டு.

கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் மிக விரைவாக நடந்து கொண்டிருக்கின்றன.

திருப்பணி வேலைகளுக்கும் கும்பாபிஷேக வைதீக காரியங்களுக்கும் மற்றும் அன்னதானத்திற்கும் சுமார் 70 லட்சம் வரை ஆகும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.  திருப்பணி வேலைகள் மற்றும் கும்பாபிஷேக வைதீக காரியங்கள் மற்றும் அன்னதான விபரங்கள் தனித்தனியே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணி வேலைகளில் பங்கு பெற விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட செலவுகளில் ஏதேனும் ஒன்றை தனிநபராகவோ அல்லது ஓரிருவர் இணைந்தோ பொறுப்பு எடுத்துக் கொள்ளலாம் அல்லது

 மேற்படி கும்பாபிஷேக மற்றும் திருப்பணி விஷயங்களுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் ஸ்வாமி சடைவுடையார் சேவா டிரஸ்ட்டினை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு

K.வெங்கட்ராமன்

நடைமுறை நிர்வாகி

அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில்

தெற்கு பாப்பான்குளம், கல்லிடைக்குறிச்சி

செல் : +91 98421 51386


*****************************************************************************

SRI PORCHADAICHI, 

SWAMY SRI SADAIUDAYAR TEMPLE 

ASTA BANDHANA MAHA KUMBABISEKAM


Greetings to all the devotees of the Arulmigu Swami Sadaiudaiyar Temple,

On the auspicious 1201st year of the Vishwavasu year, 20th day of the month of Panguni, 03.04.2026, Friday, on the auspicious day of the Twithiyai Thidhi, Chithirai Nakshatra and Siddha Yoga, it is advisable to perform Maha Kumbabhishekam for Arulmigu Swami Sadaiudaiyar and Arulmigu Maha Ganapathi, Arulmigu Porsadaichi, Pathrakali, Durgai Ambaal and Parivar Devas residing in the Taurus sign* of Ambasamudram Taluk, South Papankulam.

On the date of the day, the above Kumbabhishekam will be performed by our temple Gomurathar Mr. Hariharan and Karuvelam Mr.  V. Ganesan, Ettupillai Koottathar, our temple administration, priests Mr. Kumar and priests Mr. Ramachandran, and Swamy Sadaiudayar Temple Administration and  Swami Sadaiudaiyar Seva Trust will jointly run the temple in a good manner.

There will be annadhanam on that day.

The Kumbabhishekam work is progressing very quickly.

*It is estimated that around 70 lakhs will be spent on the work of the Thirupani, the Kumbabhishekam Vedic works, and food and drink.

The details of the work of the Kumbabhishekam Vedic works, and food and drink are given below separately.

 Those who wish to participate in the Kumbabhishekam and the renovation work can take responsibility for any of the expenses given below individually or jointly or

Those who wish to donate towards the above Kumbabhishekam and renovation contributors can approach Swami Sadaivudaiyar Seva Trust.


For more details

K.Venkatraman

Nadaimurai Nirvagi

Arulmigu Swami Sadaivudaiyar Temple

South Papankulam, Kallidaikurichi

Cell : +91 98421 51386

Monday, October 7, 2024

07.10.2024- NAVARATHIRI POOJAI IN OUR SWAMY SADAIUDAYAR TEMPLE

 07.10.2024- NAVARATHRI POOJAI 

IN OUR SWAMY SADAIUDAYAR TEMPLE


அன்புள்ள ஸ்வாமி சடைவுடையார் திருக்கோவில் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்,

இன்று 7.10.2024 புரட்டாசி 21ஆம் தேதி திங்கட்கிழமை
இன்று நவராத்திரி 5ம் நாள் 

நமது திருக்கோவிலில் நவராத்திரி அபிஷேக அலங்கார பூஜைகள் மற்றும் சண்டி பாராயணம் நல்ல முறையில் ஆரம்பித்து சிறப்பாக நடந்து முடிந்தது. 

இன்றைய பூஜைக்கான செலவுகளும் மற்றும் சண்டி பாராயணத்திற்கான செலவும் வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானத்திற்கான செலவும், பக்தர்கள் அனுப்பிய காணிக்கையை கொண்டு ஸ்வாமி சடை உடையார் சேவா டிரஸ்ட் பொறுப்பேற்று கொண்டது. 

மேலும் திருக்கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கொண்டு வந்திருந்த பூ மாலைகள், பழங்கள் பூஜை பொருட்களும் அதில் சேர்க்கப்பட்டு நமது திருக்கோவில் அர்ச்சகர்கள் திரு குமார் மற்றும் ராமச்சந்திரன் அவர்கள் இன்றைய  பூஜையை சிறப்பாக நடத்தி கொடுத்தனர்.

Greetings to Dear all Swami Sadaivudayar Temple Devotees,
Today is 7.10.2024 Purattasi 21st - Monday

Today is 5th day of Navratri.

In our temple Navarathiri poojai abisekam and  Chandi Parayanam started well and ended well.

The cost of today's puja and the cost of Chandi Parayana, the cost of food for the devotees who had come to Temple - by donation sent by the devotees to Swamy Sadaiudayar Seva Trust Bank Account was took over of by the Swami Sadaiudayar Seva Trust.

Also, the flower garlands, fruits and puja items brought by the devotees who came to the temple were added to it and our temple priests Mr. Kumar and Ramachandran conducted the today puja very well.

Thanks to all
Photos link

(above msg translate from Google Translate)









Thursday, September 19, 2024

2024 நவராத்திரி & சண்டி ஹோமம் அழைப்பிதழ் (2024 NAVRATHRI & SANDI HOMAM INVITATION)

அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம்,

நமது திருக்கோவிலில் வருகிற 03.10.2024 வியாழக்கிழமை முதல் 12.10.2024 சனிக்கிழமை வரை பத்து நாட்கள் நவராத்திரி பூஜைகள் நடைபெறும்.

 நவராத்திரியின் முதல் ஏழு நாட்களும் அதாவது 03.10.2024 முதல் 09.10.2024 வரை தினசரி சண்டி பாராயணம் நடைபெறும். 

10.10.2024 துர்க்காஷ்டமி அன்று சண்டி ஹோமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 12.10.2024 சனிக்கிழமை அன்று நமது திருக்கோவிலில் புஷ்பாஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தினசரி பூஜை நேரம் காலை 9 மணி முதல் 12.30 மணி வரை.

*பகல் பூஜைகள் மட்டுமே* நடைபெறும்.

திருக்கோவில் பக்தர்கள் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

நவராத்திரி பத்து நாட்களும் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் - பக்தர்கள் அனுப்பும் காணிக்கையை கொண்டு ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

 மேலும் *சண்டி பாராயணம்* மற்றும் *சண்டி ஹோமத்தில் பங்கேற்று அர்ச்சனை செய்ய விரும்புவோர் தனியாக நமது டிரஸ்ட் வங்கிக்கணக்கில் சண்டி பாராயணத்திற்கு ரூபாய் 2000/-ம்,
சண்டி ஹோமத்திற்கு ரூபாய் 3000/-ம் செலுத்தி  பணம் செலுத்திய விபரம் தங்களுடைய பெயரையும் அர்ச்சனை விபரங்களையும் சண்டி பாராயணத்திற்கு அல்லது சண்டி ஹோமத்திற்கு என தனியாக குறிப்பிட்டு 6381635486 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

இத்துடன் நவராத்திரி பூஜைக்கான இன்விடேசன் இணைக்கப் பட்டுள்ளது.

நன்றி






Greetings to the devotees of Arulmiku Swami Sadayudayar Temple,

Navratri Pujas will be held for ten days from Thursday 03.10.2024 to Saturday 12.10.2024 in our temple.

 On the first seven days of Navratri i.e. from 03.10.2024 to 09.10.2024 Chandi Parayanam will be held daily.

Chandi Homam is organized on 10.10.2024 DURGASTAMI

Pushpanjali is organized in our temple on Saturday 12.10.2024.

In Navarathiri days - Temple Daily puja time is 9 am to 12.30 pm.

Day Pujas will be held only.

Devotees are requested to attend the temple regularly.

*On behalf of *Swami Sadaiudayar Seva Trust*, the annadanam for the devotees who visit the temple on all ten days of Navratri is organized with the offerings sent by the devotees.

 Also, those who wants to participate in Chandi Parayanam and Chandi Homam should pay Rs 2000/- for Chandi Parayanam and Pay Rs 3000/- for Chandi Homam separately in our trust bank account.

If the payment details are sent to Whatsapp number 6381635486 mentioning their name, Address, Pan Number and archanai details separately for Chandi Parayanam or Chandi Homam, the Prasadam will be sent.

Enclosed is the invitation for Navratri Puja.

Thank you

Wednesday, October 4, 2023

ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் - 2023 நவராத்திரி அழைப்பிதழ் (2023 NAVARATHIRI INVITATION)



            அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம், 

                நமது திருக்கோவிலின் 2023 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா வருகிற 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை முதல் 24.10.2023 செவ்வாய்க்கிழமை வரை 10 நாட்களும் கொண்டாடப்படுகிறது.

            இந்த 10 நாட்களும் பகல் பூஜை மட்டுமே.

            பெண்கள் எந்த வயதினரும் கோவிலுக்குள்ளோ கோவில் வளாகத்தின் எந்த பகுதியிலுமோ அனுமதி இல்லை என்பது நம் திருக்கோவிலின் வழி வழியாக வரும் அனைவரும் அறிந்ததே. 

            நவராத்திரி பூஜையை முன்னிட்டு நம் திருக் கோவிலுக்கு காணிக்கை செலுத்த விரும்புபவர்கள் நம் திருக்கோவில் ட்ரஸ்டின் வங்கி கணக்கில் செலுத்தலாம்.

            வழக்கம் போல நவராத்திரிக்கான அன்னதானம்,  விழா ஏற்பாடு முதல் கோயில் துப்புரவு செலவு மற்றும் தபால் செலவு வரை அனைத்தையும் நமது திருக்கோவிலின் ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் - பக்தர்கள் சார்பாக ஏற்றுக் கொண்டுள்ளது. 

            காணிக்கை உங்கள் விருப்பம் போல இன்விடேஷனில் உள்ள கோவில் டிரஸ்ட் வங்கி கணக்கிற்கு அனுப்பிய பின், பின்வரும் விவரங்களான 

1) UPI ID உட்பட பணம் அனுப்பிய விபரம், 

2) உங்களது பெயர்,

3) முகவரி,

4) செல் நம்பர்,

5) பான் கார்டு நம்பர் 

6) அர்ச்சனை விபரம் ஆகியவற்றை  தவறாமல் கோவில் தகவல் தொடர்பு மூர்த்தி அவர்களுக்கு 63816 35486 என்ற whatsapp எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்.

            மற்றபடி நேரில் வந்து பூஜையில் கலந்து கொள்பவர்கள் அர்ச்சகர்கள் சம்பாவணையை அவர்களிடமே கொடுத்து விடலாம்.


நன்றி

Friday, June 23, 2023

Swami Sadayudayar Temple - 2023 Varushabhisheka Puja Details

 Dear Devotees of Swami Sadaiudayar Temple,

            Varushabhisheka Pooja of our Swami Sadaiudayar Temple will be held on 01.07.2023, Saturday morning, 16th day of Aani month.

Varushabisheka Poojas were performed by our temple Archakar Mr. Kumar and Mr. Ramachandran will jointly run it.

There is Annadhanam on that day.

**********************

If the devotees send the desired offerings and donations to our temple bank account, the pooja will be performed and the receipt and prasadham will be sent.

For details related to donation and pooja, please contact the following number.

***  Moorthy : 6381 6354 86 ***

******************************************************************
Our temple bank account
SWAMY SADAIUDAYAR SEVA TRUST
A/C NO : 1106101062746
Canara Bank, Kallidaikurichi Branch
IFSC : CNRB0001106

Devotees who have sent money to our above bank account, after sending the money - send the following details to the Whatsapp number 6381 6354 86 and the receipt and prasadham will be sent...

1) DETAILS OF TRANSACTION
2) NAME & ADDRESS
3) PAN NUMBER

******************************************************************

Our temple has daily puja for 365 days of the year.

All days except Fridays in the month of Thai in our temple is only one time puja (day puja).

Daily Puja Timings : 10.30 am to 12.00 noon only.

If any of the devotees coming late during the daily pooja periods, it is important to inform the Archakar in the pooja mode of the day.

It is known to all devotees who come to our temple by way that women of any age are not allowed in any part of our temple premises and boys are allowed only after performing upanayanam.

Let's all unite and pray to God to celebrate Varushabhisheka.

Thanks


Further information Please Contact
Moorthy
6381 6354 86



Dear DEVOTEES,
Doners are requested to provide PAN number or Aadhar number with address and fund transfer details preferrably screen shot, This is compulsory for us to mention doner details while filing Income Tax return. 
Thank You

ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் - 2023 வருஷாபிஷேக பூஜை விபரம்

அன்புள்ள ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம்,

நமது ஸ்வாமி சடையுடையார் திருக்கோவிலின் வருஷாபிஷேக பூஜையானது வருகிற ஆனி மாதம் 16ம் நாள்  01.07.2023 சனிக்கிழமை அன்று  காலை  நடைபெறுகிறது. 

வருஷாபிஷேக பூஜைகளை நமது திருக்கோவில் அர்ச்சகர்கள் திரு. குமார் மற்றும் திரு.ராமச்சந்திரன் அவர்கள் இணைந்து நடத்தி வைப்பார்கள்.

அன்றைய தினம் அன்னதானம் உண்டு. 

*******************

பக்தர்கள் விரும்பும் காணிக்கை மற்றும் நன்கொடைகளை நமது திருக்கோவில் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தால் பூஜை செய்து ரசீது மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நன்கொடை, பூஜை தொடர்பான விபரங்களுக்கு  கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

*** மூர்த்தி : 6381 6354 86 ***

******************************************************************

நமது திருக்கோவில் வங்கிக் கணக்கு

SWAMY SADAIUDAYAR SEVA TRUST
A/C NO : 1106101062746
Canara Bank, Kallidaikurichi Branch
IFSC : CNRB0001106

மேற்கண்ட நமது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பிய பக்தர்கள் பணம் அனுப்பிய பின் - கீழ்க்கண்ட விபரங்களை 6381 6354 86 என்ற Whatsapp எண்ணிற்கு அனுப்பி வைத்தால் ரசீது மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்...
1) DETAILS OF TRANSACTION
2) NAME & ADDRESS
3) PAN NUMBER

******************************************************************

நமது திருக்கோவிலில் வருடத்தின் 365 நாட்களும் தினசரி பூஜை உண்டு. 

நமது திருக்கோவிலில் தை மாத வெள்ளிக் கிழமைகளை தவிர அனைத்து நாட்களும் ஒரு கால பூஜை (பகல் பூஜை) மட்டுமே

தினசரி பூஜை நேரம் : காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே. 

தினசரி பூஜா காலங்களில் பூஜைக்கு வரும் பக்தர்கள் எவரேனும் தாமதமாக வருவதாக இருந்தால் அன்றைய பூஜை முறையில் உள்ள அர்ச்சகர்களுக்கு கண்டிப்பாக தகவல் கொடுக்க வேண்டியது முக்கியமாகும். 

பெண்கள் எந்த வயதினரும் நமது திருக்கோவில் வளாகத்தின் எந்தப் பகுதியிலும் அனுமதி கிடையாது மற்றும்  ஆண் குழந்தைகளும் உபநயனம் செய்வித்த பின்னரே அனுமதி என்பது வழிவழியாக நமது திருக்கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் அறிந்ததே. 

வருஷாபிஷேக விழா சிறக்க அனைவரும் ஒன்றிணைந்து இறைவனை வேண்டிக் கொள்வோம். 

நன்றி

தகவல் தொடர்பில்
மூர்த்தி
6381 6354 86


Dear DEVOTEES,
Doners are requested to provide PAN number or Aadhar number with address and fund transfer details preferrably screen shot, This is compulsory for us to mention doner details while filing Income Tax return. 
Thank You

Saturday, December 17, 2022

ஸ்வாமி சடவுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு (17.12.2022)

Swamy Saranam

Date : 17.12.2022
Place : Kallidaikurichi

அன்புள்ள ஸ்வாமி சடவுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம்,

    கடந்த இரு வாரங்களுக்கு முன் நமது  திருக்கோவிலுக்கு சொந்தமான கல்லிடைக்குறிச்சி மண்டபத்தில் வைத்து டிரஸ்ட் மீட்டிங் நடைபெற்றது.
    அதில் அனைவரும் இணைந்து தீர்மானித்தபடி, நமது பக்தர்கள் திருக் கோவிலுக்கு வரும்போது தங்குவதற்கு சில நேரங்களில் அறைகள் இல்லாமல் இருப்பதால் கல்லிடைக்குறிச்சி மண்டபத்தின் மாடியில் மேலும் 5 புதிய அறைகள் தேவையான வசதிகளுடன் கட்டிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு தோராயமாக ஆகும் செலவினை கணக்கிட்டு பார்த்து, ஒரு அறைக்கு ரூபாய் மூன்று லட்சம் வரை செலவாகும் என தீர்மானிக்கப் பட்டுள்ளது.
    நமது ஸ்வாமி சடவுடையார் சேவா டிரஸ்ட் இதற்கு பொறுப்பு எடுத்து இந்த ஐந்து அறைகளையும் கட்டி முடிக்க தீர்மானித்துள்ளது. 
    ஆகவே நமது பக்தர்களும் இந்த சேவையில் கலந்து கொள்ளலாம். தாங்களும் தங்களால் இயன்ற பொறுப்பு எடுத்துக் கொள்ளலாம். 
       மொத்தம் ஐந்து ரூம்கள் என்று தீர்மானித்தபடி ஒரு தனி பக்தரே அவருடைய சொந்த முயற்சியில் ஒரு ரூம் கட்டித் தரலாம் அல்லது நான்கு ஐந்து நபர்கள் குழுவாக இணைந்து  ஒரு ரூம் என கட்டி முடித்தாலும் ஐந்து  ரூம்களும் கட்டி விரைவாக நமது பக்தர்களுக்கு தங்குவதற்கு இந்த அறை வசதி கிடைக்கும்படி செய்திடலாம். 
    மேலே கட்டப்படும் அறைகள் அனைத்தும் நமது ஸ்வாமி சடவுடையார் திருக்கோவில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். மற்ற எவருக்கும் வாடகைக்கு விடப்பட மாட்டாது என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.

➤   ஒன்றிணைவோம் !!
➤   கை கொடுப்போம் !!
➤   ஒற்றுமையாய் சிறப்புடன் செய்து முடிப்போம் !!

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்...
 திரு.சங்கர் ராமன்,  கோவில் நிர்வாகி,  செல் : +91 96776 44241
 அல்லது
 எஸ்.மந்திர மூர்த்தி, கோவில் தகவல் தொடர்பு
 ஸ்வாமி சடவுடையார் திருக்கோவில், செல் : +91 6381 6354 86
***********************************************************************************

Dear Devotees of Swami Sadavudayar Temple,

     A trust meeting was held two weeks ago at Kallidaikurichi Mandapam belonging to our temple. As agreed upon by all,  As there are sometimes no rooms for our devotees to stay when they come to the temple, it has been decided to build 5 more rooms on the floor of the hall with necessary facilities.  After calculating the approximate cost, it has been determined that one room will cost up to three lakh rupees.

  Our Swami Sadavudayar Seva Trust has taken responsibility for this and decided to complete these five rooms.  So our devotees can also participate in this service.  You can also take responsibility as much as you can.

 A single devotee can build a room on his own effort as it is decided that there are five rooms in total or a group of four or five people can build one room and build all the five rooms quickly and make these rooms available for our devotees to stay.

 All the above rooms will be given only to the devotees who come for darshan of our Swami Sadavudayar Temple.  Please note that it will not be rented out to anyone else.

➤   Let's unite!!
➤   Let's join hands !! 
➤   
Let's do it together with excellence !!

Further details please contact
Mr.Sankar Raman, Temple Trustee, Cell : +91 96776 44241

Or 


S.Manthira Moorthi, Temple Communication
Swamy Sadavudayar Temple, Cell : +91 6381635486

Friday, December 9, 2022

அருள்மிகு ஸ்வாமி சடவுடையார் திருக்கோவிலின் 2023 - தைவெள்ளி பூஜை விபரம்

அன்புள்ள ஸ்வாமி சடவுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம்,

நமது அருள்மிகு ஸ்வாமி சடவுடையார் திருக்கோவிலின் 2023 தைவெள்ளி பூஜை  (பகல் - இரவு  பூஜை ) - வருகிற (20.1.2023 ) தை மாதம் - 6ம் தேதி முதல்  4 வெள்ளி கிழமைகளிலும் நடைபெற உள்ளது. 

தை வெள்ளி - பகல் இரவு பூஜைகள் கோவிலில் வைத்து மட்டுமே நடைபெறும்.

''பூஜை விபரம் பத்திரிகை'' இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.

பெண்கள் எந்த வயதினரும் அனுமதி கிடையாது என்பது வழிவழியாக நம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அறிந்ததே. 

அன்னதானம் உபயம்  - நமது ஸ்வாமி சடவுடையார் சேவா டிரஸ்ட் ஏற்று கொண்டுள்ளது. 

நன்றி

மேலும் விபரங்களுக்கு 
மூர்த்தி 
தகவல் தொடர்பு 
ஸ்வாமி சடவுடையார் திருக்கோவில் 
தெற்குபாப்பான்குளம், கல்லிடைக்குறிச்சி 
செல்  : +91 6381 6354 86 (W/A)
email : swamysadaiudayartemple@gmail.com

*******************************************************************

Dear Swami Sadavudayar Temple Devotees, 

Thai month Friday Puja 2023 of our Lord Swami Sadavudayar Temple will be held on 20.1.2023 to 10.2.2023. 

Thai Friday (day and night) pujas are held only in the temple.

Pooja details Invitation is attached

Donations and Offerings Accepted, 

Women of any age are not allowed in our temple premises in our temple This is known to all who visit our temple regularly. 

Let's preserve the heritage of our temple

Donations & Contributions Accepted, 
Please Send your Contribution to the following Temple, Trust Bank A/c (See Invitation) and after please send the following Details to My W/A - 6381635486 Number.
1) Contribution Transation Details
2) Your Name (or Receipt Name)
3) Address
4) Contributor's Aadhar or PAN Number (Number Only)
5) Contact Number (W/app)


Receipts and Offerings will be sent to all devotees who have sent donations after the pujas on the Friday of Thai Month.

Thank you

More Details,
Moorthi,
Temple Communication
Swamy Sadavudayar Temple
Southpapankulam, Kallidaikurichi
Cell : +91 6381 6354 86





Saturday, September 17, 2022

ஸ்வாமி சடவுடையார் திருக்கோவில் 2022 நவராத்திரி பத்திரிக்கை

 அன்புள்ள ஸ்வாமி சடவுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம்,

நமது திருக்கோவிலின் 2022 நவராத்திரி திருவிழாவிற்கான பத்திரிகை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.



நன்றி

இப்படிக்கு

மந்திரமூர்த்தி
தகவல் தொடர்பு
செல் : 6381 6354 86


Thursday, December 16, 2021

2022ஆம் ஆண்டு தை மாதம் வெள்ளிக்கிழமை பூஜைகளின் பத்திரிக்கை

 அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோயில் பக்தர்களுக்கு வணக்கம், 


நமது திருக்கோவிலின் 2022ஆம் ஆண்டு தை மாதம் வெள்ளிக்கிழமை பூஜைகளின் பத்திரிக்கை இத்துடன் இணைத்துள்ளேன் .

நன்றி




Friday, December 11, 2020

2021 - அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவிலின் தைவெள்ளி பூஜை விபரம்

அன்புள்ள ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம், 

 நமது அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவிலின் தைவெள்ளி பூஜை (பகல் - இரவு பூஜை ) - வருகிற (22.1.2021 ) தை மாதம் - 9ம் தேதி முதல் 4 வெள்ளி கிழமைகளிலும் நடைபெற உள்ளது. 


 தை வெள்ளி - பகல் இரவு பூஜைகள் கோவிலில் வைத்து மட்டுமே நடைபெறும். 

''பூஜை விபரம் பத்திரிகை'' இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. 

பெண்கள் எந்த வயதினரும் அனுமதி கிடையாது என்பது வழிவழியாக நம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அறிந்ததே. 

அன்னதானம் உபயம் - நமது ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் ஏற்று கொண்டுள்ளது. 

மத்திய மாநில அரசின் வழிகாட்டுதல் மற்றும் உத்தரவின் பேரில் - (கோவிட் 19) மாஸ்க் அணியாதவர்கள் கோவிலுக்குள் அனுமதி கிடையாது. கோவிலின் வெளி பகுதியில் கை, கால்களை சுத்தம் செய்த பின் கோவிலுக்குள் வர வேண்டும். கோவிலின் வெளியிலோ உள் பகுதியிலோ ஒருவருக்கொருவர் நெருங்கி நிற்பதை தவிர்த்து சமூக இடைவெளி கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். 

நன்றி

மேலும் விபரங்களுக்கு
மூர்த்தி
தகவல் தொடர்பு
ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில்
தெற்குபாப்பான்குளம்,
கல்லிடைக்குறிச்சி
செல் : +91 6381 6354 86 (W/A)
email : swamysadaiudayartemple@gmail.com






Monday, June 15, 2020

அருள்மிகு. சடையுடையார் திருக்கோவில் அறிவிப்பு (ஆனி 2020)

அருள்மிகு சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம்.
2020இல் கடந்த சில மாதங்களாக நமது அனைவரது வாழ்க்கைச் சூழல் மிகவும் மாறிவிட்டது காலம் நம் அனைவரையும் கொஞ்சம் புரட்டி போட்டுள்ளது என்பது உண்மையே இறைவன் தனக்கும் சிறிது தனிமை வேண்டும் என்று சில காலங்கள் விரும்பி விட்டானோ என்னவோ 

நாமும் அதற்கு ஏற்ப சக மனிதர்களிடமிருந்து புறந்தள்ளி தனிமையில் ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்து விட்டோம் விரைவில் இந்த தவம் முடிந்து அவர் தரிசனம் கிடைத்திட அவர் சன்னதி நுழைந்திட நமக்கு வரம் கிடைக்கட்டும். அனைவரும் வேண்டி கேட்போம்

இன்று ஆனி மாதப் பிறப்பு இன்று பிறந்த இக்குழந்தை நமக்கு எல்லா செல்வங்களையும் வாரி வழங்கட்டும்.

 அருள்மிகு சடையுடையார் திருக்கோவில் வழக்கம்போல் தினசரி பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இன்று முதல் அர்ச்சகர் குமார் அவர்களது பூஜை முறையாகும். 2020 ஆனி மாதம் 15 ஆம் தேதி வரை அவர் பூஜை முறையில் இருப்பார்.

மத்திய மாநில அரசு உத்தரவுப்படி திருக்கோயில்களில் பக்தர்கள் இதுவரை அனுமதிக்கப்படவில்லை மற்றபடி தடையின்றி தினசரி பூஜைகள் நடந்து வருகின்றன ஆகவே பக்தர்கள் வழக்கம்போல் தங்களது அர்ச்சனை மற்றும் பூஜைகளுக்கு எங்களையோ அல்லது அர்ச்சகர்களையோ தொடர்பு கொள்ளலாம்.
அர்ச்சனைகள்  செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். *நமது திருக்கோவில் மற்றும் நமது சடையுடையார் டிரஸ்டினால் நிர்வகிக்கப்படும் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் காணிக்கைக்கு மட்டுமே ரசிது அனுப்பப்படும்.

மற்றபடி

கோவிலுக்கு காணிக்கை செலுத்த விரும்புபவர்கள் கோவிலின் வங்கி கணக்கில் செலுத்தி அதன் ரசீது அல்லது TRANSACTION IDயை எங்களுக்கு அனுப்பி வைத்தால் மட்டுமே எங்களால் ரசீது அனுப்ப முடியும். வங்கி சூழ்நிலை மற்றும் தபால் அலுவலகங்களின் சூழ்நிலையினால் சிலருக்கு பிரசாதங்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது. 

தற்போது கோவிலின் நடைமுறை நிர்வாகியாக திரு சங்கரராமன் அவர்கள் (கல்லிடைக்குறிச்சி) உள்ளார் என்பதை இதனுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி 

மூர்த்தி,
தகவல் தொடர்பு
Cell : 6381635486

Saturday, March 21, 2020

Swamy Sadaiudayar Temple - 2020 Panguni Uthiram Function Invitation

Swamy Sadaiudayar Temple - 2020 Panguni Uthiram Function Invitation


அன்புள்ள சடையுடையார் திருக்கோயில் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நமது திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற பங்குனி மாதம் 24ம் தேதி 6.4.2020 திங்கட்கிழமை அன்று நடைபெறுகிறது.
அதன் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்வாமியின் அனுக்கிரகம் பெற்றிட கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி



If any changes to the Temple Pooja, we inform you
Devotees please join our Temple Whatsapp Group ''Swamy Sadaiudayar-Patch 2''
Click the following Link to join our Temple Whatsapp Group
https://chat.whatsapp.com/BIbUAMiNyWnHpW10TSxeMR


Our Temple Whatsapp Group
1) SWAMY SADAIUDAYAR TEMPLE (Almost Full)
2) SWAMY SADAIUDAYAR-Patch 2     (Now Open)

நமது திருக்கோவில் சம்பந்தமான தகவல்களை வெளியிடுவதற்கு மேற்கண்ட வாட்ஸ்அப் குரூப் மற்றும் இந்த swamysadaiudayar.blogspot.com என்ற தளமும் மேலும் swamysadaiudayartemple@gmail.com என்ற இ-மெயில் முகவரியையும் மட்டுமே பயன்படுத்துகிறோம் வேறு எதன் மூலமாகவும் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் நம்பகத்தன்மைக்கு கோவில் நிர்வாகம் பொறுப்பல்ல.
அன்புள்ள ஸ்வாமி சடையுடையார் திருக்கோயில் பக்தர்களுக்கு வணக்கம்,

நமது இந்த Swamy Sadaiudayar Temple என்ற குழு ஆரம்பித்து 256 பங்கேற்பாளர்கள் இணைந்துள்ளனர். மேலும் இணைவதற்கு என்னை தொடர்பு கொண்ட வண்ணம் உள்ளனர். ஆயினும் 256 நபர்களுக்கு மேல் ஒரு குழுவில் இணைக்க இயலாததால் 
''Swamy Sadaiudayar-Patch 2'' என்ற பெயரில் 2வது குழு ஆரம்பிக்கப் பட்டுள்ளது. மற்றவர்கள் அதில் இணைந்து கொள்ளலாம். 

2 குழுவும் நம் திருக்கோயில் சார்பாக ஒன்று போல் செயல்படும். அதன் இணைப்பையும் இதன்பின் இணத்துள்ளேன்.
மற்றவர்களுக்கு இதை பகிரவும். 

இணைய விரும்புபவர்கள், அவர்களாக விரும்பி சுயவிருப்பத்தின் பேரில் இக்குழுவில் இணைந்து கொள்ளலாம்.  மற்ற எவரும் இக்குழுவில் நுழைய வேண்டாம்.

மேலும் ஏற்கனவே நமது Swamy Sadaiudayar Temple Groupல் உள்ளவர்கள் Swamy Sadaiudayar-Patch 2 ல்  இணைய வேண்டாம்.

மற்றபடி
நம் கோயிலை சார்ந்து,
இக்குழுவில் இணைய இயலாதவர்கள் மட்டும்
(Without knowledge about using whatsapp group or aged peoples) எங்களிடம் தெரிவித்தால் இணைத்து விடப்படுவர்.

 மற்றவர்கள் சுயமாக அவர்களாகவே விரும்பி
இணைவதையே விரும்புகிறோம்.

மற்றபடி இக்குழுவின் சட்ட திட்டங்கள் ஏற்கனவே உள்ளதுதான்.

இதில் காலை மதியம் மாலை வணக்கங்கள் தவிர்க்கவும். 

குழு நிர்வாகியை தவிர வேறு யாரும் இதில் தகவல் அனுப்ப முடியாது. 

*நமது சடையுடையார் திருக்கோவிலைச் சாராத,  
குழுவிற்கு சம்பந்தமில்லாத ஆன்மீக அன்பர்கள் குழுவை விட்டு வெளியேறுவது தவறாக கருதப்பட மாட்டாது* 

நம் திருக்கோயிலை பற்றிய தகவல்கள் அவ்வப்போது நமது 2 குழுவிலும்  தெரிவிக்கப்படும் அதுவரை இக்குழு அமைதியாக இருக்கும் ஆன்மீக அன்பர்களும் நமது பக்தர்களும் பொறுமை காக்கவும்

மற்றபடி திருக்கோவிலுக்கு தாங்கள் தகவல் அனுப்ப மற்றும் திருக்கோவில் பற்றிய தகவல் பெற என்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளலாம் தங்களுக்கு தேவையான தகவல்கள் அளிக்கப்படும்
 நன்றி


இந்த இணைப்பின் மூலம் நமது Temple WhatsApp குழுவில் சேர்ந்திடுங்கள்:
Please Click the Following Link to Join Our Temple Whatsapp Group - 2nd Batch
https://chat.whatsapp.com/BIbUAMiNyWnHpW10TSxeMR

ஏற்கனவே இக்குழுவில் இருப்பவர்கள் patch 2 ல் இணைய வேண்டாம்.
மற்றவர்களுக்கு மட்டும் அனுப்பவும்.

Dear Devotees,
Pls avoid to join Patch 2 group if already you join this group.

Please share group link only to others.
Thank you

Wednesday, February 12, 2020

நமது கோயில் சம்பந்தமான WhatsApp குழுவில் சேருங்கள் "SWAMY SADAIUDAYAR TEMPLE"

நமது கோயில் சம்பந்தமான WhatsApp குழுவில் சேருங்கள் "SWAMY SADAIUDAYAR TEMPLE"



இந்த இணைப்பின் மூலம் எனது WhatsApp குழுவில் சேர்ந்திடுங்கள்: https://chat.whatsapp.com/HK8JS4wa6bFAkvoSaSxrRr 



இந்த இணைப்பின் மூலம் எனது WhatsApp குழுவில் சேர்ந்திடுங்கள்: https://chat.whatsapp.com/HK8JS4wa6bFAkvoSaSxrRr


  • நமது கோயில் சம்பந்தமான தகவல்கள் மட்டுமே அனுப்பப்படும்.

  • குழு நிர்வாகிகள் மட்டுமே தகவல்கள் அனுப்புவார்கள்.

  • காலை மதியம், மாலை, இரவு வணக்கங்களை கண்டிப்பாக தவிர்க்கவும்.

  • முக்கியமாக நமது ஸ்வாமி சடையுடையார் திருக்கோயிலுக்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட குருப். எனவே நமது ஸ்வாமி சடையுடையாரை குலதெய்வமாக கொண்டுள்ளவர்கள் மட்டுமே இக்குழுவில் இணையவும். மற்றவர்கள் தயவுசெய்து தவிர்க்கவும். 

ஏற்கனவே 6 மாத காலமாக நமது whatsapp channel வழியாக 250 பக்தர்களுக்கு மேலாக தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் பலருக்கு நம் பதிவுகள் சென்று சேர்வதில்லை என கேட்டுக் கொண்டதால் இந்த குரூப் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. 

மற்றபடி நீங்கள்  வழக்கம் போல் எங்களிடம் தனிப்பட்ட முறையில் உங்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

நன்றி
மூர்த்தி
Cell : 6381635486
கோயில் தகவல் தொடர்பு அதிகாரி
ஸ்வாமி சடையுடையார் திருக்கோயில்
தெற்கு பாப்பான்குளம்
கல்லிடைக்குறிச்சி

Saturday, November 2, 2019

அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோயில் 2020 தை வெள்ளி கிழமை பூஜை விபரம்

அருள்மிகு சடையுடையார் சரணம்.

அன்பார்ந்த சடையுடையார் திருக்கோயில் அடிமைகளுக்கு நமஸ்காரம்,
 நமது சடையுடையார் திருக்கோயில் 2020 தை வெள்ளி மற்றும் பங்குனி உத்திர விபரங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.


தை மாத 4 வெள்ளிக் கிழமையிலும் பகல் மற்றும் இரவு பூஜை உண்டு.
பெண்கள் எந்த வயதினரும் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை என்பது நம் திருக்கோயிலின் வம்சாவழி அடிமைகளாகிய தாங்கள் அறிந்ததே. 

நம் திருக்கோயிலுக்கு காணிக்கை செலுத்த விரும்புபவர்கள் பத்திரிக்கையில் வங்கிக் கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அனுப்புபவர்களுக்கு திருக்கோயில் டிரஸ்டிலிருந்து ரசீது, பிரசாதங்கள் அனுப்பப்படும்.  வழக்கம்போல் அன்னதானம், விழா ஏற்பாடு முதல் கோயில் துப்புரவு செலவு வரை மற்றும் பத்திரிக்கை அச்சு செலவு மற்றும் தபால் செலவு வரை அனைத்தையும் நமது திருக்கோயிலின் ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் - அடிமைகள் சார்பாக ஏற்றுக் கொண்டுள்ளது. எந்நாளில் வேண்டுமானாலும்உங்களுக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.  காணிக்கை உங்கள் விருப்பம்போல் பத்திரிகை யில் உள்ள வங்கிக்கணக்கிற்கு அனுப்பி, பணபரிமாற்ற விபரங்களையும் உங்கள் முகவரியையும் கண்டிப்பாக திரு.சங்கரராமன், டிரஸ்ட் மேனேஜர் அவர்களுக்கு அனுப்பி வைக்கவும். மற்றபடி நேரில் வந்து பூஜையில் கலந்து கொள்பவர்கள்  அர்ச்சகர்கள் சம்பாவணையை அவர்களிடமே கொடுத்து விடலாம்.


நன்றி.

மேலும் கோவில் மற்றும் விழா பற்றிய தகவல்களுக்கு தொடர்பு கொள்க...

இப்படிக்கு
N.S.M.மூர்த்தி
தகவல் தொடர்பு அதிகாரி
ஸ்வாமி சடையுடையார் திருக்கோயில்.
தெற்கு பாப்பான்குளம், கல்லிடைக்குறிச்சி.
Cell 6381 6354 86
Email: swamysadaiudayartemple@gmail.com

Sunday, August 11, 2019

நமது சடையுடையார் திருக்கோயில் 2019 - நவராத்திரி திருவிழா

நமது சடையுடையார் திருக்கோயில் 2019 - நவராத்திரி திருவிழா

அருள்மிகு சடையுடையார் சரணம்.


அன்பார்ந்த சடையுடையார் திருக்கோயில் அடிமைகளுக்கு நமஸ்காரம்,
 நமது சடையுடையார் திருக்கோயில் நவராத்திரி திருவிழா வருகிற 29.9.2019 முதல் 8.10.2019 வரை 10 நாட்களும் கொண்டாடப்படுகிறது. அதற்கான பத்திரிகை நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

இந்த 10 நாட்களும் பகல் பூஜை மட்டுமே.

           பெண்கள் எந்த வயதினரும் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை என்பது நம் திருக்கோயிலின் வம்சாவழி அடிமைகளாகிய தாங்கள் அறிந்ததே. 
             நவராத்திரி பூஜையை முன்னிட்டு நம் திருக்கோயிலுக்கு காணிக்கை செலுத்த விரும்புபவர்கள் பத்திரிக்கையில் வங்கிக் கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 
             அதில் அனுப்புபவர்களுக்கு திருக்கோயில் டிரஸ்டிலிருந்து ரசீது, பிரசாதங்கள் அனுப்பப்படும்.  வழக்கம்போல் நவராத்திரிக்கான அன்னதானம், விழா ஏற்பாடு முதல் கோயில் துப்புரவு செலவு வரை மற்றும் பத்திரிக்கை அச்சு செலவு மற்றும் தபால் செலவு வரை அனைத்தையும் நமது திருக்கோயிலின் ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் - அடிமைகள் சார்பாக ஏற்றுக் கொண்டுள்ளது. 
             கட்டளைதாரர்கள் தவிர 10 நாட்களிலும் வரும் நட்சத்திரங்களில் எந்நாளில் வேண்டுமானாலும் உங்களுக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.  காணிக்கை உங்கள் விருப்பம் போல் பத்திரிகையில் உள்ள வங்கிக்கணக்கிற்கு அனுப்பி, அதன் விபரங்களையும் உங்கள் முகவரியையும் கண்டிப்பாக திரு.சங்கரராமன், டிரஸ்ட் மேனேஜர் அவர்களுக்கு அனுப்பி வைக்கவும். 
             மற்றபடி நேரில் வந்து பூஜையில் கலந்து கொள்பவர்கள்  அர்ச்சகர்கள் சம்பாவணையை அவர்களிடமே கொடுத்து விடலாம்.

நன்றி.

மேலும் கோவில் மற்றும் விழா பற்றிய தகவல்களுக்கு தொடர்பு கொள்க...

இப்படிக்கு
N.S.M.மூர்த்தி
தகவல் தொடர்பு அதிகாரி
ஸ்வாமி சடையுடையார் திருக்கோயில்.
தெற்கு பாப்பான்குளம், கல்லிடைக்குறிச்சி.
Cell : 6381 6354 86
Email: swamysadaiudayartemple@gmail.com