கோயில் பற்றி சில குறிப்புகள்

இக்கோயில் ஆதி அனாதி காலந்தொட்டு பறையன் பாப்பான்குளம் என்று அழைக்கப்படும் கிராமத்தின் தென்புறம் சுமார் 2 கி.மீ தாண்டி, எட்டுபிள்ளைக் கூட்டத்தார் பெண்வழிக்காணி சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. களக்காட்டிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழ்ப்பக்கம் ஒரு கொப்புராத் தோப்பு பாதையின் நடுவில் அமைந்துள்ளது.
இந்தப் பாதையின் கிழக்கு தொடர்பு தெற்கு காருகுறிச்சிக்குப் பின் தடைபட்டு விட்டது. ஆனால் கோயிலிலிருந்து இப்போது சிங்கம்பட்டி, ஏரம்மாள்புரம் வழியாக பாபநாசத்தை அடைந்து அதன் தொடர்ச்சி கீழாம்புர் கிராமத்தை சென்றடைகிறது.
கோயிலில் உண்டியலோ, துவஜஸ்தம்பமோ, உத்ஸவ விக்கிரகங்களோ, பெரிய பிரகாரங்களோ அமையப் பெறவில்லை.
தினமும் இரவு பூஜை கிடையாது. பிரதி வருடம் தை மாதத்தில் 4 அல்லது 5 வெள்ளிக் கிழமைகளில் பகல் பூஜையும், இரவில் அபிசேக பூஜையும் நடு இரவில் பரிகார தேவதைகளுக்கு ரகசிய பூஜையும் நடைபெறும். தை மாதப் பிறப்பு வெள்ளிக் கிழமை வந்தால் அன்றும், மறுதினமும் பொது பூஜை கிடையாது. அடுத்து வரும் வெள்ளிக் கிழமை பொது பூஜை வைக்கப்படும். அப்பொழுது காப்பரிசியும், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காயுடன், பானகமும் நிவேதனம் செய்யப்படுகிறது. காணிக்கையாக கோமுரத்தாரிடம் பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் காணிக்கை காசுகளையும், முழுத் தேங்காயையும் கொடுப்பது வழக்கம்.
சுவாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் இத்திருக்கோவிலை பராமரித்து வருகிறது.

பெண்கள் எந்த வயதினரும் அனுமதி கிடையாது என்பது வழிவழியாக நம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அறிந்ததே. அது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது

தை வெள்ளி மற்றும் நவராத்திரி காலங்களில் அன்னதானம் செலவுகளை சுவாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் ஏற்றுக் கொள்கிறது.

இது தோஷ பரிகார கோவில் கிடையாது. எனவே இங்கு எந்த விதமான பரிகார பூஜைகளும் நடத்த படுவதில்லை. கோவில் அடிமைகள் விரும்பினால் சண்டி ஹோமம் மற்றும் ருத்ர ஹோமம், சாஸ்தா சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை மட்டும் விசேஷ நாட்களில் sponsor செய்து ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

மற்ற சாதாரண நாட்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையில் பகல் பூஜை மட்டும் நடைபெறும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் கோவில் தகவல் தொடர்பு அதிகாரியை தொடர்பு கொண்டு பின் வரவும். மேலும் பூஜை, கோவில் பற்றிய விபரங்களுக்கும் கோவில் தகவல் தொடர்பு அதிகாரியை அணுகவும்.

நமது திருக்கோவில் A/C ற்கு (04800100067814) ஆன்லைன்-ல் பணம் அனுப்பியவர்கள் கண்டிப்பாக பண பரிமாற்ற விபரம் மற்றும் உங்களுடைய விபரம் அனைத்தையும் swamysadaiudayartemple@gmail.com என்ற ஈமெயிலுக்கு தகவல் தெரிவித்தால் ரசீது மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

டிரஸ்ட் A/c-ற்கு (04800100062746) பணம் அனுப்பியவர்கள் கோவில் ட்ரஸ்ட்டி சங்கரராமன் அவர்களை தொடர்பு கொண்டால் உங்களுக்கு ரசீது மற்றும் பிரசாதம் அனுப்பி வைப்பார்.

கோவிலுக்குரிய நேர்ச்சை காணிக்கைகள் மற்றும் பொருள்களையும், கோமுறத்தாருக்கு கொடுக்க வேண்டிய காணிக்கைகளையும் , கோவில் தகவல் தொடர்பு அதிகாரியிடமோ அல்லது நமது கோவில் ட்ரஸ்ட்டியிடமோ மட்டுமே கொடுத்து ரசீது பெற்று கொள்ள வேண்டியது அவசியம். வேறு நபர்களிடம் கொடுக்கும் எந்த பொருளுக்கும் கோவில் நிர்வாகம் அல்லது டிரஸ்ட் பொறுப்பாகாது. மேலும் கோவில் சம்பந்தமான எந்தஒரு அபிவிருத்தி, விசேஷ நாட்களுக்குரிய கட்டளை மற்றும் டொனேஷன் சம்பந்தமாக கோவில் தகவல் தொடர்பு அதிகாரியிடமோ அல்லது நமது கோவில் ட்ரஸ்ட்டியிடமோ மட்டுமே அணுகவும். இந்த தளம் ஒன்று மட்டுமே கோவிலிலிருந்து இயக்கப்படுகிறது. வேறு எந்த தளத்திலிருந்து வரும் செய்திகளுக்கும் கோவில் நிர்வாகம் பொறுப்பாகாது.
நன்றி

Please Contact :
MR.S.MANTHIRA MOORTHI,
Temple Communication Dept.
Cell : 6381 6354 86 (Call/W.App/Msg)

or email to swamysadaiudayartemple@gmail.com
-------------------------------------------------------------
A.SANKARA RAMAN
Temple Trustee
SWAMY SADAIUDAYAR TEMPLE
No.26/160, SADAIUDAYAR SEVA TRUST,
Veerappa puram Street, Kallidaikurichi - 627416.
Tirunelveli
Cell : 96776 44241 (Call / W.A / Msg)
(Time : 9.00 a.m. to 1.00 a.m. - 4 p.m. to 8.30 p.m.)

Tuesday, April 2, 2019

IMPORTANT NOTICE FROM SWAMY SADAIUDAYAR TEMPLE, Therku papankulam, Tirunelveli

IMPORTANT NOTICE FROM 
SWAMY SADAIUDAYAR TEMPLE, 
Therkupapankulam, Kallidaikurichi, Tirunelveli.



To All Devotees of our Temple & Trust
Sri P.S.EASWARAN of Kizha Ambur (84 Yrs) was GREAT STALWART. 
I am sad to inform that our 
Sri P.S.EASWARAN
Trustee of our Temple(Swamy Sadaiudayar Temple)
had reached DIVINE WORLD on 01.04.2019 at 14.45 hrs at Tirunelveli. 
Share your Grief.