கோயில் பற்றி சில குறிப்புகள்

இக்கோயில் ஆதி அனாதி காலந்தொட்டு பறையன் பாப்பான்குளம் என்று அழைக்கப்படும் கிராமத்தின் தென்புறம் சுமார் 2 கி.மீ தாண்டி, எட்டுபிள்ளைக் கூட்டத்தார் பெண்வழிக்காணி சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. களக்காட்டிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழ்ப்பக்கம் ஒரு கொப்புராத் தோப்பு பாதையின் நடுவில் அமைந்துள்ளது.
இந்தப் பாதையின் கிழக்கு தொடர்பு தெற்கு காருகுறிச்சிக்குப் பின் தடைபட்டு விட்டது. ஆனால் கோயிலிலிருந்து இப்போது சிங்கம்பட்டி, ஏரம்மாள்புரம் வழியாக பாபநாசத்தை அடைந்து அதன் தொடர்ச்சி கீழாம்புர் கிராமத்தை சென்றடைகிறது.
கோயிலில் உண்டியலோ, துவஜஸ்தம்பமோ, உத்ஸவ விக்கிரகங்களோ, பெரிய பிரகாரங்களோ அமையப் பெறவில்லை.
தினமும் இரவு பூஜை கிடையாது. பிரதி வருடம் தை மாதத்தில் 4 அல்லது 5 வெள்ளிக் கிழமைகளில் பகல் பூஜையும், இரவில் அபிசேக பூஜையும் நடு இரவில் பரிகார தேவதைகளுக்கு ரகசிய பூஜையும் நடைபெறும். தை மாதப் பிறப்பு வெள்ளிக் கிழமை வந்தால் அன்றும், மறுதினமும் பொது பூஜை கிடையாது. அடுத்து வரும் வெள்ளிக் கிழமை பொது பூஜை வைக்கப்படும். அப்பொழுது காப்பரிசியும், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காயுடன், பானகமும் நிவேதனம் செய்யப்படுகிறது. காணிக்கையாக கோமுரத்தாரிடம் பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் காணிக்கை காசுகளையும், முழுத் தேங்காயையும் கொடுப்பது வழக்கம்.
ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் இத்திருக்கோவிலை பராமரித்து வருகிறது.

பெண்கள் எந்த வயதினரும் அனுமதி கிடையாது என்பதும் 18 வயது பூர்த்தியாகாத ஆண்கள் எவரும் அனுமதி கிடையாது என்பதும் வழிவழியாக நம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அறிந்ததே. அது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது

தை வெள்ளி மற்றும் நவராத்திரி காலங்களில் அன்னதானம் செலவுகளை ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் ஏற்றுக் கொள்கிறது.

இது தோஷ பரிகார கோவில் கிடையாது. எனவே இங்கு எந்த விதமான பரிகார பூஜைகளும் நடத்த படுவதில்லை. கோவில் பக்தர்கள் விரும்பினால் சண்டி ஹோமம் மற்றும் ருத்ர ஹோமம், சாஸ்தா சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை மட்டும் விசேஷ நாட்களில் sponsor செய்து ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

மற்ற சாதாரண நாட்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையில் பகல் பூஜை மட்டும் நடைபெறும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் கோவில் தகவல் தொடர்பு அதிகாரியை (Cell : 6381635486) தொடர்பு கொண்டு பின் வரவும். மேலும் பூஜை, கோவில் பற்றிய விபரங்களுக்கும் கோவில் தகவல் தொடர்பு அதிகாரியை அணுகவும்.

நமது திருக்கோவில் A/C ற்கு (1106101067814) ஆன்லைன்-ல் பணம் அனுப்பியவர்கள் கண்டிப்பாக பண பரிமாற்ற விபரம் மற்றும் உங்களுடைய விபரம் அனைத்தையும் swamysadaiudayartemple@gmail.com என்ற ஈமெயிலுக்கு அல்லது 6381635486 என்ற Whatsapp எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் ரசீது மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

டிரஸ்ட் A/c-ற்கு (1106101062746) பணம் அனுப்பியவர்கள் கோவில் தகவல் தொடர்பு அதிகாரி மூர்த்தி அவர்களை (Cell : 6381635486) தொடர்பு கொண்டால் உங்களுக்கு ரசீது மற்றும் பிரசாதம் அனுப்பி வைப்பார்.

கோவிலுக்குரிய நேர்ச்சை காணிக்கைகள் மற்றும் பொருள்களையும், கோமுறத்தாருக்கு கொடுக்க வேண்டிய காணிக்கைகளையும் , கோவில் தகவல் தொடர்பு அதிகாரியிடமோ அல்லது நமது கோவில் ட்ரஸ்ட்டியிடமோ மட்டுமே கொடுத்து ரசீது பெற்று கொள்ள வேண்டியது அவசியம். வேறு நபர்களிடம் கொடுக்கும் எந்த பொருளுக்கும் கோவில் நிர்வாகம் அல்லது டிரஸ்ட் பொறுப்பாகாது. மேலும் கோவில் சம்பந்தமான எந்தஒரு அபிவிருத்தி, விசேஷ நாட்களுக்குரிய கட்டளை மற்றும் டொனேஷன் சம்பந்தமாக கோவில் தகவல் தொடர்பு அதிகாரியிடமோ அல்லது நமது கோவில் ட்ரஸ்ட்டியிடமோ மட்டுமே அணுகவும். இந்த தளம் ஒன்று மட்டுமே கோவிலிலிருந்து இயக்கப்படுகிறது. வேறு எந்த தளத்திலிருந்து வரும் செய்திகளுக்கும் கோவில் நிர்வாகம் பொறுப்பாகாது.
நன்றி

Please Contact :
MR.S.MANTHIRA MOORTHI,
Temple Communication Dept.
Cell : 6381 6354 86 (Call/W.App/Msg)

or email to swamysadaiudayartemple@gmail.com
-------------------------------------------------------------
K.VENKATA RAMAN
Temple Trustee
SWAMY SADAIUDAYAR TEMPLE
No.26/160, SADAIUDAYAR SEVA TRUST,
Veerappa puram Street, Kallidaikurichi - 627416.
Tirunelveli
Cell : 9842151386 (Call / W.A / Msg)
(Time : 9.00 a.m. to 1.00 a.m. - 4 p.m. to 8.30 p.m.)

Thursday, March 12, 2026

ESTIMATE DETAILS OF THIRUPPANI, YAGASALAI, ANNADHANAM

 கும்பாபிஷேக விஷயமாக டிரஸ்ட் வங்கி கணக்கிற்கு  பணம் அனுப்புபவர்கள் ''கும்பாபிஷேக காணிக்கை'' என்று குறிப்பிட்டு அனுப்பவும்...

கும்பாபிஷேக விஷயமாக பணம் அனுப்புபவர்களுக்கு கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் பத்து நாட்களுக்குள் அனைவருக்கும் பிரசாதம் அனுப்பப்படும்.

Those who send money to the Trust Bank account for the Kumbabhishekam ceremony should mention ''Kumbabhishekam Kaanikkai'' and send it...

Prasad will be sent to all those who send money for the Kumbabhishekam ceremony within ten days after the completion of the Kumbabhishekam ceremony.






THIRUPPANI WORK DETAILS SEPERATELY GIVEN BELOW




YAGASALAI WORK DETAILS SEPERATELY GIVEN BELOW





THANK YOU


INFORMATION ABOUT OUR BANK DETAILS

அனைவருக்கும் வணக்கம் 

நமது ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் 2026 கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 

திருப்பணி வேலைகள் மற்றும் கும்பாபிஷேக வேலைகள் மற்றும் அன்னதானம் ஆகியவற்றில் பங்கு பெற விரும்புவோர் நமது ஸ்வாமி சடைவுடையார் சேவா டிரஸ்ட் பின்வரும் வங்கி கணக்கிற்கு தங்களது காணிக்கைகளை செலுத்தி அதன் விபரங்களை 6382548731 என்ற எண்ணிற்கு மட்டும் வாட்ஸ் அப்பில் தெரிவித்தால் போதுமானது.

இந்த எண்ணானது தகவல் தெரிவிப்பதற்காக மட்டுமே (Only W/app Message ) பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

 இதில் யாரும் போனில் அழைக்க வேண்டாம்.(Don't Phone call to this number / Only message).

திருப்பணி மற்றும் நன்கொடை தொடர்பான மேலும் விவரங்களுக்கு நடைமுறை நிர்வாகி 

திரு வெங்கட்ராமன்  : Cell : +91 98421 51386

திரு நடராஜன் : CELL : +91 93444 63519

அவர்களை கலந்து ஆலோசித்துக் கொள்ளவும்.

நன்றி

Swamy Sadaiudayar Seva Trust

Cell no : 6382 54 8731

(Only message / no calls)

**************************************************

** _*A/C DETAILS_ ***

Please send your contribution to

Swamy Sadaiudayar Seva Trust 

A/c no : 1106101062746

Canara bank, Kallidaikurichi

IFSC : CNRB0001106


OR USING THE FOLLOWING QR CODE (both are Same A/c)

**************************************************


After the Transaction 

Please furnish the following details and send it to.   W/APP : 6382548731 

1. Transaction slip

2. Receipt name and address

3. Pan card number 

Thank you

மேற்கண்ட வங்கி கணக்கை உபயோகித்து உங்கள் வங்கியிலிருந்து NEFT, IMPS மூலமாகவும் செலுத்தலாம். QR Code உபயோகித்து GPAY மற்றும் PHONE PAY, BHIM வழியாகவும் செலுத்தலாம்.

ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் வங்கி கணக்கிற்கு அனுப்பும் நன்கொடைகளுக்கு 80 G ரசீது வழங்கப்படும்

பணம் அனுப்பிய பின் கட்டாயம் 6382548731 வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவிக்கவும்


Hello everyone 

On the occasion of our Swami Sadaivudaiyar Temple 2026 Kumbabhishekam 

Those who wish to participate in the Thirupani works and Kumbabhishekam works and Annadhanam, it is sufficient to pay their donations to the following bank account of our Swami Sadaivudaiyar Seva Trust and inform its details only to the number 6382548731 on WhatsApp.

This number has been specially created for contribution information purposes only (Only W/app Message).

No one should call on this number by phone.

For more details regarding the renovation and donation, please contact the Executive Administrator Mr. Venkatraman  : Cell : +91 98421 51386
NATARAJAN : 93444 63519

Please discuss with them.

Thank you


Swamy Sadaiudayar Seva Trust

Cell no : 6382548731

(Only message / no calls)

**************************************************

** _*A/C DETAILS_ ***

Please send your contribution to

Swamy Sadaiudayar Seva Trust 

A/c no : 1106101062746

Canara bank, Kallidaikurichi

IFSC : CNRB0001106

**************************************************

After the Transaction 

Please furnish the following details and send it to. W/APP : 6382548731 

1. Transaction slip

2. Receipt name and address

3. Pan card number 

Thank you

You can also pay through NEFT, IMPS from your bank using the above bank account. You can also pay through GPAY and PHONE PAY, BHIM using QR Code.

 Donations sent to Swami Sadaiudaiyar Seva Trust Bank Account will be issued with an 80G receipt

After sending the money, please inform us on WhatsApp at 6382548731

THANK YOU

ஸ்ரீ பொற்சடைச்சி ஸ்வாமி ஸ்ரீ சடையுடையார் திருக்கோவில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம்

ஸ்ரீ பொற்சடைச்சி 

ஸ்வாமி ஸ்ரீ சடையுடையார் திருக்கோவில் 

அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் 


அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நிகழும் மங்களகரமான 1201ம் ளூ விஸஂவாவஸூ வருஷம் பங்குனி மாதம் 20ஆம் தேதி 03.04.2026 வெள்ளிக்கிழமை த்விதியை திதியும் சித்திரை நக்ஷத்திரமும் ஸித்த யோகமும் கூடிய சுப தினத்தில் அன்று காலை 9 to 10.30 க்குள் ரிஷப லக்னத்தில் அம்பாசமுத்திரம் வட்டம் தெற்கு பாப்பான்குளம் வீற்றிருக்கும் அருள்மிகு  ஸ்வாமி சடையுடையார் மற்றும் அருள்மிகு மகா கணபதி, அருள்மிகு பொற்சடைச்சி மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உத்தமம்.

நாளது தேதியில் மேற்படி கும்பாபிஷேகத்தை நமது திருக்கோவில் கோமுரத்தார் திரு. ஹரிஹரன் அவர்களும், கருவேலம் திரு. V.கணேசன் அவர்களும், எட்டுப்பிள்ளை கூட்டத்தார்களும் நமது திருக்கோவில் நிர்வாகமும் மற்றும் அர்ச்சகர்கள் திரு.குமார் மற்றும் அர்ச்சகர் திரு.ராமச்சந்திரன் அவர்களும் மற்றும் ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்டும்  இணைந்து நல்ல முறையில் நடத்திக் கொடுப்பார்கள்.

அன்றைய தினம் அன்னதானம் உண்டு.

கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் மிக விரைவாக நடந்து கொண்டிருக்கின்றன.

திருப்பணி வேலைகளுக்கும் கும்பாபிஷேக வைதீக காரியங்களுக்கும் மற்றும் அன்னதானத்திற்கும் சுமார் 70 லட்சம் வரை ஆகும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.  திருப்பணி வேலைகள் மற்றும் கும்பாபிஷேக வைதீக காரியங்கள் மற்றும் அன்னதான விபரங்கள் தனித்தனியே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணி வேலைகளில் பங்கு பெற விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட செலவுகளில் ஏதேனும் ஒன்றை தனிநபராகவோ அல்லது ஓரிருவர் இணைந்தோ பொறுப்பு எடுத்துக் கொள்ளலாம் அல்லது

 மேற்படி கும்பாபிஷேக மற்றும் திருப்பணி விஷயங்களுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் ஸ்வாமி சடைவுடையார் சேவா டிரஸ்ட்டினை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு

K.வெங்கட்ராமன்

நடைமுறை நிர்வாகி

அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில்

தெற்கு பாப்பான்குளம், கல்லிடைக்குறிச்சி

செல் : +91 98421 51386


*****************************************************************************

SRI PORCHADAICHI, 

SWAMY SRI SADAIUDAYAR TEMPLE 

ASTA BANDHANA MAHA KUMBABISEKAM


Greetings to all the devotees of the Arulmigu Swami Sadaiudaiyar Temple,

On the auspicious 1201st year of the Vishwavasu year, 20th day of the month of Panguni, 03.04.2026, Friday, on the auspicious day of the Twithiyai Thidhi, Chithirai Nakshatra and Siddha Yoga, it is advisable to perform Maha Kumbabhishekam for Arulmigu Swami Sadaiudaiyar and Arulmigu Maha Ganapathi, Arulmigu Porsadaichi, Pathrakali, Durgai Ambaal and Parivar Devas residing in the Taurus sign* of Ambasamudram Taluk, South Papankulam.

On the date of the day, the above Kumbabhishekam will be performed by our temple Gomurathar Mr. Hariharan and Karuvelam Mr.  V. Ganesan, Ettupillai Koottathar, our temple administration, priests Mr. Kumar and priests Mr. Ramachandran, and Swamy Sadaiudayar Temple Administration and  Swami Sadaiudaiyar Seva Trust will jointly run the temple in a good manner.

There will be annadhanam on that day.

The Kumbabhishekam work is progressing very quickly.

*It is estimated that around 70 lakhs will be spent on the work of the Thirupani, the Kumbabhishekam Vedic works, and food and drink.

The details of the work of the Kumbabhishekam Vedic works, and food and drink are given below separately.

 Those who wish to participate in the Kumbabhishekam and the renovation work can take responsibility for any of the expenses given below individually or jointly or

Those who wish to donate towards the above Kumbabhishekam and renovation contributors can approach Swami Sadaivudaiyar Seva Trust.


For more details

K.Venkatraman

Nadaimurai Nirvagi

Arulmigu Swami Sadaivudaiyar Temple

South Papankulam, Kallidaikurichi

Cell : +91 98421 51386