அருள்மிகு சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம்.
2020இல் கடந்த சில மாதங்களாக நமது அனைவரது வாழ்க்கைச் சூழல் மிகவும் மாறிவிட்டது காலம் நம் அனைவரையும் கொஞ்சம் புரட்டி போட்டுள்ளது என்பது உண்மையே இறைவன் தனக்கும் சிறிது தனிமை வேண்டும் என்று சில காலங்கள் விரும்பி விட்டானோ என்னவோ
நாமும் அதற்கு ஏற்ப சக மனிதர்களிடமிருந்து புறந்தள்ளி தனிமையில் ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்து விட்டோம் விரைவில் இந்த தவம் முடிந்து அவர் தரிசனம் கிடைத்திட அவர் சன்னதி நுழைந்திட நமக்கு வரம் கிடைக்கட்டும். அனைவரும் வேண்டி கேட்போம்
இன்று ஆனி மாதப் பிறப்பு இன்று பிறந்த இக்குழந்தை நமக்கு எல்லா செல்வங்களையும் வாரி வழங்கட்டும்.
அருள்மிகு சடையுடையார் திருக்கோவில் வழக்கம்போல் தினசரி பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இன்று முதல் அர்ச்சகர் குமார் அவர்களது பூஜை முறையாகும். 2020 ஆனி மாதம் 15 ஆம் தேதி வரை அவர் பூஜை முறையில் இருப்பார்.
மத்திய மாநில அரசு உத்தரவுப்படி திருக்கோயில்களில் பக்தர்கள் இதுவரை அனுமதிக்கப்படவில்லை மற்றபடி தடையின்றி தினசரி பூஜைகள் நடந்து வருகின்றன ஆகவே பக்தர்கள் வழக்கம்போல் தங்களது அர்ச்சனை மற்றும் பூஜைகளுக்கு எங்களையோ அல்லது அர்ச்சகர்களையோ தொடர்பு கொள்ளலாம்.
அர்ச்சனைகள் செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். *நமது திருக்கோவில் மற்றும் நமது சடையுடையார் டிரஸ்டினால் நிர்வகிக்கப்படும் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் காணிக்கைக்கு மட்டுமே ரசிது அனுப்பப்படும்.
மற்றபடி
கோவிலுக்கு காணிக்கை செலுத்த விரும்புபவர்கள் கோவிலின் வங்கி கணக்கில் செலுத்தி அதன் ரசீது அல்லது TRANSACTION IDயை எங்களுக்கு அனுப்பி வைத்தால் மட்டுமே எங்களால் ரசீது அனுப்ப முடியும். வங்கி சூழ்நிலை மற்றும் தபால் அலுவலகங்களின் சூழ்நிலையினால் சிலருக்கு பிரசாதங்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது.
தற்போது கோவிலின் நடைமுறை நிர்வாகியாக திரு சங்கரராமன் அவர்கள் (கல்லிடைக்குறிச்சி) உள்ளார் என்பதை இதனுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
மூர்த்தி,
தகவல் தொடர்பு
Cell : 6381635486
No comments:
Post a Comment