அருள்மிகு சடையுடையார் சரணம்.
அன்பார்ந்த சடையுடையார் திருக்கோயில் அடிமைகளுக்கு நமஸ்காரம்,
நமது சடையுடையார் திருக்கோயில் 2020 தை வெள்ளி மற்றும் பங்குனி உத்திர விபரங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.
தை மாத 4 வெள்ளிக் கிழமையிலும் பகல் மற்றும் இரவு பூஜை உண்டு.
பெண்கள் எந்த வயதினரும் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை என்பது நம் திருக்கோயிலின் வம்சாவழி அடிமைகளாகிய தாங்கள் அறிந்ததே.
நம் திருக்கோயிலுக்கு காணிக்கை செலுத்த விரும்புபவர்கள் பத்திரிக்கையில் வங்கிக் கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அனுப்புபவர்களுக்கு திருக்கோயில் டிரஸ்டிலிருந்து ரசீது, பிரசாதங்கள் அனுப்பப்படும். வழக்கம்போல் அன்னதானம், விழா ஏற்பாடு முதல் கோயில் துப்புரவு செலவு வரை மற்றும் பத்திரிக்கை அச்சு செலவு மற்றும் தபால் செலவு வரை அனைத்தையும் நமது திருக்கோயிலின் ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் - அடிமைகள் சார்பாக ஏற்றுக் கொண்டுள்ளது. எந்நாளில் வேண்டுமானாலும்உங்களுக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். காணிக்கை உங்கள் விருப்பம்போல் பத்திரிகை யில் உள்ள வங்கிக்கணக்கிற்கு அனுப்பி, பணபரிமாற்ற விபரங்களையும் உங்கள் முகவரியையும் கண்டிப்பாக திரு.சங்கரராமன், டிரஸ்ட் மேனேஜர் அவர்களுக்கு அனுப்பி வைக்கவும். மற்றபடி நேரில் வந்து பூஜையில் கலந்து கொள்பவர்கள் அர்ச்சகர்கள் சம்பாவணையை அவர்களிடமே கொடுத்து விடலாம்.
நன்றி.
மேலும் கோவில் மற்றும் விழா பற்றிய தகவல்களுக்கு தொடர்பு கொள்க...
இப்படிக்கு
N.S.M.மூர்த்தி
தகவல் தொடர்பு அதிகாரி
ஸ்வாமி சடையுடையார் திருக்கோயில்.
தெற்கு பாப்பான்குளம், கல்லிடைக்குறிச்சி.
Cell 6381 6354 86
Email: swamysadaiudayartemple@gmail.com