கோயில் பற்றி சில குறிப்புகள்
இக்கோயில் ஆதி அனாதி காலந்தொட்டு பறையன் பாப்பான்குளம் என்று அழைக்கப்படும் கிராமத்தின் தென்புறம் சுமார் 2 கி.மீ தாண்டி, எட்டுபிள்ளைக் கூட்டத்தார் பெண்வழிக்காணி சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. களக்காட்டிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழ்ப்பக்கம் ஒரு கொப்புராத் தோப்பு பாதையின் நடுவில் அமைந்துள்ளது.
இந்தப் பாதையின் கிழக்கு தொடர்பு தெற்கு காருகுறிச்சிக்குப் பின் தடைபட்டு விட்டது. ஆனால் கோயிலிலிருந்து இப்போது சிங்கம்பட்டி, ஏரம்மாள்புரம் வழியாக பாபநாசத்தை அடைந்து அதன் தொடர்ச்சி கீழாம்புர் கிராமத்தை சென்றடைகிறது.
கோயிலில் உண்டியலோ, துவஜஸ்தம்பமோ, உத்ஸவ விக்கிரகங்களோ, பெரிய பிரகாரங்களோ அமையப் பெறவில்லை.
தினமும் இரவு பூஜை கிடையாது. பிரதி வருடம் தை மாதத்தில் 4 அல்லது 5 வெள்ளிக் கிழமைகளில் பகல் பூஜையும், இரவில் அபிசேக பூஜையும் நடு இரவில் பரிகார தேவதைகளுக்கு ரகசிய பூஜையும் நடைபெறும். தை மாதப் பிறப்பு வெள்ளிக் கிழமை வந்தால் அன்றும், மறுதினமும் பொது பூஜை கிடையாது. அடுத்து வரும் வெள்ளிக் கிழமை பொது பூஜை வைக்கப்படும். அப்பொழுது காப்பரிசியும், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காயுடன், பானகமும் நிவேதனம் செய்யப்படுகிறது. காணிக்கையாக கோமுரத்தாரிடம் பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் காணிக்கை காசுகளையும், முழுத் தேங்காயையும் கொடுப்பது வழக்கம்.
ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் இத்திருக்கோவிலை பராமரித்து வருகிறது.
பெண்கள் எந்த வயதினரும் அனுமதி கிடையாது என்பதும் 18 வயது பூர்த்தியாகாத ஆண்கள் எவரும் அனுமதி கிடையாது என்பதும் வழிவழியாக நம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அறிந்ததே. அது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது
தை வெள்ளி மற்றும் நவராத்திரி காலங்களில் அன்னதானம் செலவுகளை ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் ஏற்றுக் கொள்கிறது.
இது தோஷ பரிகார கோவில் கிடையாது. எனவே இங்கு எந்த விதமான பரிகார பூஜைகளும் நடத்த படுவதில்லை. கோவில் பக்தர்கள் விரும்பினால் சண்டி ஹோமம் மற்றும் ருத்ர ஹோமம், சாஸ்தா சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை மட்டும் விசேஷ நாட்களில் sponsor செய்து ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
மற்ற சாதாரண நாட்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையில் பகல் பூஜை மட்டும் நடைபெறும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் கோவில் தகவல் தொடர்பு அதிகாரியை (Cell : 6381635486) தொடர்பு கொண்டு பின் வரவும். மேலும் பூஜை, கோவில் பற்றிய விபரங்களுக்கும் கோவில் தகவல் தொடர்பு அதிகாரியை அணுகவும்.
நமது திருக்கோவில் A/C ற்கு (1106101067814) ஆன்லைன்-ல் பணம் அனுப்பியவர்கள் கண்டிப்பாக பண பரிமாற்ற விபரம் மற்றும் உங்களுடைய விபரம் அனைத்தையும் swamysadaiudayartemple@gmail.com என்ற ஈமெயிலுக்கு அல்லது 6381635486 என்ற Whatsapp எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் ரசீது மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
டிரஸ்ட் A/c-ற்கு (1106101062746) பணம் அனுப்பியவர்கள் கோவில் தகவல் தொடர்பு அதிகாரி மூர்த்தி அவர்களை (Cell : 6381635486) தொடர்பு கொண்டால் உங்களுக்கு ரசீது மற்றும் பிரசாதம் அனுப்பி வைப்பார்.
கோவிலுக்குரிய நேர்ச்சை காணிக்கைகள் மற்றும் பொருள்களையும், கோமுறத்தாருக்கு கொடுக்க வேண்டிய காணிக்கைகளையும் , கோவில் தகவல் தொடர்பு அதிகாரியிடமோ அல்லது நமது கோவில் ட்ரஸ்ட்டியிடமோ மட்டுமே கொடுத்து ரசீது பெற்று கொள்ள வேண்டியது அவசியம். வேறு நபர்களிடம் கொடுக்கும் எந்த பொருளுக்கும் கோவில் நிர்வாகம் அல்லது டிரஸ்ட் பொறுப்பாகாது. மேலும் கோவில் சம்பந்தமான எந்தஒரு அபிவிருத்தி, விசேஷ நாட்களுக்குரிய கட்டளை மற்றும் டொனேஷன் சம்பந்தமாக கோவில் தகவல் தொடர்பு அதிகாரியிடமோ அல்லது நமது கோவில் ட்ரஸ்ட்டியிடமோ மட்டுமே அணுகவும். இந்த தளம் ஒன்று மட்டுமே கோவிலிலிருந்து இயக்கப்படுகிறது. வேறு எந்த தளத்திலிருந்து வரும் செய்திகளுக்கும் கோவில் நிர்வாகம் பொறுப்பாகாது.
நன்றி
Please Contact :
MR.S.MANTHIRA MOORTHI,
Temple Communication Dept.
Cell : 6381 6354 86 (Call/W.App/Msg)
or email to swamysadaiudayartemple@gmail.com
-------------------------------------------------------------
K.VENKATA RAMAN
Temple Trustee
SWAMY SADAIUDAYAR TEMPLE
No.26/160, SADAIUDAYAR SEVA TRUST,
Veerappa puram Street, Kallidaikurichi - 627416.
Tirunelveli
Cell : 9842151386 (Call / W.A / Msg)
(Time : 9.00 a.m. to 1.00 a.m. - 4 p.m. to 8.30 p.m.)
Tuesday, November 19, 2024
Monday, October 7, 2024
07.10.2024- NAVARATHIRI POOJAI IN OUR SWAMY SADAIUDAYAR TEMPLE
07.10.2024- NAVARATHRI POOJAI
IN OUR SWAMY SADAIUDAYAR TEMPLE
அன்புள்ள ஸ்வாமி சடைவுடையார் திருக்கோவில் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்,
இன்று 7.10.2024 புரட்டாசி 21ஆம் தேதி திங்கட்கிழமை
இன்று நவராத்திரி 5ம் நாள்
நமது திருக்கோவிலில் நவராத்திரி அபிஷேக அலங்கார பூஜைகள் மற்றும் சண்டி பாராயணம் நல்ல முறையில் ஆரம்பித்து சிறப்பாக நடந்து முடிந்தது.
இன்றைய பூஜைக்கான செலவுகளும் மற்றும் சண்டி பாராயணத்திற்கான செலவும் வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானத்திற்கான செலவும், பக்தர்கள் அனுப்பிய காணிக்கையை கொண்டு ஸ்வாமி சடை உடையார் சேவா டிரஸ்ட் பொறுப்பேற்று கொண்டது.
மேலும் திருக்கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கொண்டு வந்திருந்த பூ மாலைகள், பழங்கள் பூஜை பொருட்களும் அதில் சேர்க்கப்பட்டு நமது திருக்கோவில் அர்ச்சகர்கள் திரு குமார் மற்றும் ராமச்சந்திரன் அவர்கள் இன்றைய பூஜையை சிறப்பாக நடத்தி கொடுத்தனர்.
Greetings to Dear all Swami Sadaivudayar Temple Devotees,
Today is 7.10.2024 Purattasi 21st - Monday
Today is 5th day of Navratri.
In our temple Navarathiri poojai abisekam and Chandi Parayanam started well and ended well.
The cost of today's puja and the cost of Chandi Parayana, the cost of food for the devotees who had come to Temple - by donation sent by the devotees to Swamy Sadaiudayar Seva Trust Bank Account was took over of by the Swami Sadaiudayar Seva Trust.
Also, the flower garlands, fruits and puja items brought by the devotees who came to the temple were added to it and our temple priests Mr. Kumar and Ramachandran conducted the today puja very well.
Thanks to all
Photos link
(above msg translate from Google Translate)
Thursday, September 19, 2024
2024 நவராத்திரி & சண்டி ஹோமம் அழைப்பிதழ் (2024 NAVRATHRI & SANDI HOMAM INVITATION)
அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம்,
நமது திருக்கோவிலில் வருகிற 03.10.2024 வியாழக்கிழமை முதல் 12.10.2024 சனிக்கிழமை வரை பத்து நாட்கள் நவராத்திரி பூஜைகள் நடைபெறும்.
நவராத்திரியின் முதல் ஏழு நாட்களும் அதாவது 03.10.2024 முதல் 09.10.2024 வரை தினசரி சண்டி பாராயணம் நடைபெறும்.
10.10.2024 துர்க்காஷ்டமி அன்று சண்டி ஹோமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12.10.2024 சனிக்கிழமை அன்று நமது திருக்கோவிலில் புஷ்பாஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினசரி பூஜை நேரம் காலை 9 மணி முதல் 12.30 மணி வரை.
*பகல் பூஜைகள் மட்டுமே* நடைபெறும்.
திருக்கோவில் பக்தர்கள் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
நவராத்திரி பத்து நாட்களும் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் - பக்தர்கள் அனுப்பும் காணிக்கையை கொண்டு ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
மேலும் *சண்டி பாராயணம்* மற்றும் *சண்டி ஹோமத்தில் பங்கேற்று அர்ச்சனை செய்ய விரும்புவோர் தனியாக நமது டிரஸ்ட் வங்கிக்கணக்கில் சண்டி பாராயணத்திற்கு ரூபாய் 2000/-ம்,
சண்டி ஹோமத்திற்கு ரூபாய் 3000/-ம் செலுத்தி பணம் செலுத்திய விபரம் தங்களுடைய பெயரையும் அர்ச்சனை விபரங்களையும் சண்டி பாராயணத்திற்கு அல்லது சண்டி ஹோமத்திற்கு என தனியாக குறிப்பிட்டு 6381635486 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
இத்துடன் நவராத்திரி பூஜைக்கான இன்விடேசன் இணைக்கப் பட்டுள்ளது.
நன்றி
Greetings to the devotees of Arulmiku Swami Sadayudayar Temple,
Navratri Pujas will be held for ten days from Thursday 03.10.2024 to Saturday 12.10.2024 in our temple.
On the first seven days of Navratri i.e. from 03.10.2024 to 09.10.2024 Chandi Parayanam will be held daily.
Chandi Homam is organized on 10.10.2024 DURGASTAMI
Pushpanjali is organized in our temple on Saturday 12.10.2024.
In Navarathiri days - Temple Daily puja time is 9 am to 12.30 pm.
Day Pujas will be held only.
Devotees are requested to attend the temple regularly.
*On behalf of *Swami Sadaiudayar Seva Trust*, the annadanam for the devotees who visit the temple on all ten days of Navratri is organized with the offerings sent by the devotees.
Also, those who wants to participate in Chandi Parayanam and Chandi Homam should pay Rs 2000/- for Chandi Parayanam and Pay Rs 3000/- for Chandi Homam separately in our trust bank account.
If the payment details are sent to Whatsapp number 6381635486 mentioning their name, Address, Pan Number and archanai details separately for Chandi Parayanam or Chandi Homam, the Prasadam will be sent.
Enclosed is the invitation for Navratri Puja.
Thank you
Subscribe to:
Posts (Atom)